கல்லாய் பிறப்பதும் கடவுளாய் ஆவதும் நம் கையில்தான் உள்ளது
கல்லாய் இருப்பதும் ஒரு பிறப்புதான்
ஒரு ஆன்மா இறைவனிடமிருந்து பிரிந்து வந்த பின்
மீண்டும்
இறைவனை அடையும்வரை பலவிதமான உயிரினங்களாக
தாவரங்களாக ,ஓரறிவு படைத்த உயிரினம் தொடங்கி
மனித , தேவ கணங்கள் ,பூத ,பைசாச பிறவிகள் வரையிலும் மற்றும் பலவிதமான அக்றிணை பொருள்களாகவும் ,ஒவ்வொரு பிறவியிலும் அவன் அறியாமையினால் சேர்த்துக்கொண்ட வினை பயன்களுக்கு தகுந்தவாறு பயன்களை அனுபவித்து நீக்க முடிவில்லாமல் தொடர்ந்து பல பிறவிகளை அடைந்து கொண்டே இருக்கிறான் .
அது போன்று கல்லாய் கிடப்பதும் ஒரு பிறப்புதான் ;
கல்லில் உள்ள ஆத்மா அது முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினைக்கேற்ப ஒரு கல், காலில் மிதிபடும் படிக்கட்டாக மாறுகிறது .
ஆனால் ஒரு கல்லோ தெய்வ வடிவமாகி எல்லோரும் கை கூப்பி வணங்கும் தெய்வ மாகிறது
ஸ்ரீமத் ராமாயணத்தில் வரும் அகலிகை பாத்திரம் இந்த உண்மையை புலப்படுத்துகிறது

ஆறறிவு படைத்த மனித பிறவியில் பிறந்திருந்தும் கௌதம முனிவரின் பத்தினியாக விளங்கிய அகலிகை காமத்தின் வசப்பட்டு மோகத்தில் மயங்கி தன் கணவரான கௌதம முனிவருக்கும் அவர் உரு தாங்கி வந்த காமுகனான தேவேந்திரனுக்கும் வேறுபாடு தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு தவறு செய்தமையால் ,
உணர்ச்சிகளை வெளிபடுத்த இயலா கல்லாகுமாறு அவர் கணவரால் சபிக்கபட்டதும் ,பிறகு வினை நீங்கும் காலம் வந்ததும்
இறைவன் ஸ்ரீராமன் பாத துளி பட்டதும் ,அதன் மகிமையால் மீண்டும் பெண்ணாகி மனித பிறவியை அடைந்தாள் என்பதே இதற்க்கு சான்று
மோகத்திற்கு வசப்பட்டவர்கள் தவறு செய்வது திண்ணம்
அதனால்தான் மகாகவி பாரதி பராசக்தியிடம் செய்யும்போது ,’மோகத்தை கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு ’என்று பாடியதை நினைவில் கொள்ளவேண்டும்
உணர்ச்சிகள் மேம்படும்போது அறிவு ஒதுங்கிவிடுகிறது . அதுவே தவறுகள் நிகழ்வதற்கு காரணம் .
அதனால்தான் உணர்ச்சிவசப்பட்டுள்ள நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் நல்ல பயன்களை விட கசப்பான விளைவுகளையே தரும் என்பது உண்மை

. எப்போதும் தெளிவாக எந்த பிரச்சினையையும் பதட்டப்படாமல்
அணுகுவோர் தவறுகள் செய்வது மிகவும் குறைவு .

கல்லாய் பிறப்பதும்
கடவுளாய் ஆவதும்
நம் கையில்தான் உள்ளது

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home