Wednesday, November 5, 2008

தேவர்கள் யார்?அசுரர்கள் யார்?

தேவர்கள் யார்?
இறைவன் படைத்த இந்த உலகையும், உலகில் உள்ள
அனைத்து உயிரினங்களையும்
அனைத்து படைப்புகளையும் நிர்வாகம் செய்திட
நியமிக்கப்பட்டவர்களே தேவர்களாவர்.
தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள்
எதிர்மறை சக்திகளாகவும் .செயல்படுகின்றனர்

இந்த இரண்டு சக்திகளுமே உலக இயக்கத்திற்கு தேவை .

நிர்வாகம் செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கு
மும்மூர்த்திகளும் அனேக சக்திகளும்
உடைய கோடிக்கணக்கான தெய்வங்களும் உண்டாக்கபட்டனர்

எனினும் அனைத்து சக்திகளின் இயக்கமும்
ஒரே ஒரு பரம்பொருளின்
கட்டுப்பாட்டில்தான் இயங்கிவருகின்றன
என்பதை உண்மையை உணர்ந்தோர் நன்கறிவர்.

உணராதோர் பல தெய்வங்கள் இருக்கின்றன என்று
பேதம் கற்பித்து உயர்வு தாழ்வு கற்பித்து
சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றனர்

இந்த உலகில் அனைத்தும் ஒன்றோடொன்று
தொடர்புடையவைகளே ஆகும்

ஒவ்வொரு உயிரும் தன்னை விடுத்து மற்ற
உயிர்களையோ அல்லது பொருட்களையோ துய்த்து
உயிர் வாழ வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன
பிராணிகள் அவைகளுக்கு என விதிக்கப்பட்டுள்ள
விதிகளை மீறுவதில்லை.அதனால் அவைகள் எந்தவிதமான
புதிய சிக்கல்களையும் சந்திக்காமல் வாழ்ந்து மறைகின்றன

ஆனால் மனித இனம் மட்டும் தன் பகுத்தறிவை தவறாக
பயன்படுத்திக்கொண்டு அனைத்து இயற்கை விதிகளையும் மீறி
தான் துன்பப்படுவது மட்டுமல்லாமல் இந்த உலகத்தை நரகம்
ஆக்கி தானும் அழிந்துகொண்டிருக்கிறது
இவ்வுலகில் தான் படைத்த அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ
அனைத்து வழி வகைகளையும்
இறைவன் ஏற்படுத்தி தந்துள்ள நிலையில்
மனிதன் வரைமுறைகளை மீறி இயற்கை சட்டங்களை
மதிக்காமல் அன்பான உலகத்தை
போர்க்கள பூமியாக மாற்றிவிட்டான் .
இன்பம் அளிக்கும் இந்த உலகத்தை
தன் சுயநல போக்கினால் துன்பம் நிறைந்த உலகாக
மாற்றிவிட்டான் என்றால் அது மிகையாகாது .
பலன்களை பெறும் உயிர்கள்
தாங்கள் பெறும் பலனில்
சிறு பகுதியை தேவர்களுக்கு வழங்கி
வருவதை கொண்டு திருப்தி அடைந்து தேவர்கள் தங்கள்
கடமையை செய்து வருகின்றனர்.
அசுரர்கள் என்பவர்கள் தவம் செய்து
தெய்வங்களிடம் வரங்களை பெற்று
அகந்தை கொண்டு எல்லாவற்றையும்
மற்றவர்களிடம் அபகரித்துக்கொண்டு
சுயநல எண்ணம் மிகுந்து
எல்லோரையும் துன்புறுத்தி மகிழ்வதிலே
நாட்டம் கொண்டவர்கள் ஆவார்.
பெற்ற வரங்களினால் நன்மை செய்யும் தேவர்களை
துன்புறுத்தி நிர்வாகத்தை சீர்குலைக்கின்றனர்
சில காலத்திற்கு பிறகு பரம்பொருள் உருவம் தாங்கி
அவர்களை அழித்து உலகில் அமைதியை நிலை நாட்டுகின்றது
தற்காலத்தில் பிறருடைய சொத்துகளை அபகரித்து
அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி .
சொல்லொணா கொடுமைகளை செய்யும் அனைத்து
மனிதர்களும் அசுரர்களேயாவர்.
அசுர குணம் கொண்ட அனைத்து மனிதர்களும்
கூட்டமாக இணைந்து பெரும்பகுதியான மக்களை
அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தி வருவதால்தான்
இன்று உலகெங்கிலும் துயரங்கள் தொடர்ந்து வருகின்றன.
இவ்வாறு நன்மைகளும் தீமைகளும் , நல்லவர்களும்
தீயவர்களும் மாறி மாறி இவ்வுலகில் ஆட்சி செய்துவருகின்றனர்
இவ்வுலகம் இருக்கும் வரையில் இந்த போராட்டம்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் .
எனவே மக்கள் உண்மையை
உணர்ந்துகொண்டு நன்மைகளை செய்யும்
நல்லவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் .
தீயவர்களுக்கு ஆதரவு அளித்தால்
அவர்களால் துன்பங்கள்தான் விளையும் என்பது
.பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக
தீயவர்களால் மனிதகுலம்
அனுபவித்த துயரங்களிலிருந்து
இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை
என்பதே வேதனையான உண்மை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home