Monday, November 17, 2008

நீ யார்?

நீ யார்?
என்னய்யா கேட்டீர்கள்?

ஆம் உங்களைதான் கேட்டேன்,நீ யார் என்று
நான் ராமசாமி


அது நீ இந்த உலகில் பிறந்தபோது உன் உடலுக்கு
உன்னை சுற்றி நின்றவர்கள் வைத்த பெயர்

அது நீயல்ல

இந்த உடலுக்கு வைத்த பெயர்
இந்த உடலிலிருந்து நீ புறப்பட்டவுடன்
எடுக்கப்பட்டு உயிரற்ற உடல் அல்லது
பிணம் என்று பொதுவான பெயர் சூட்டப்படும்


அப்படியானால் நான் யார்?

இந்த கேள்வியை உனக்கே நீ கேட்டுக்கொள்
இதைதான் ரமண மகரிஷியும் சொன்னார்

நீ இந்த உடல் எடுப்பதற்கு முன்பும் இருந்தாய்

இந்த உடல் அழிந்த பிறகும் நீ இருப்பாய்

இந்த உடல் எடுப்பதற்கு முன்பு
எங்கு எவ்வாறு இருந்தாய் ?

இந்த உடல் போனபின்பு எங்கு போகிறாய்?

உடலை மறந்து இந்த உலகத்தை மறந்து
உறங்கும்போது எங்கே போகிறாய்?

இந்த கேள்விகளுக்கான பதில்கள்
உன்னுள்தான் இருக்கிறது

வெளியில் உன் ஆயுள் முழுவதும் தேடினாலும்
பதில் கிடைக்காது


இந்த உண்மையை யாரும் புரிந்துகொள்ளாமல்
வெறும் வெற்று வார்த்தைகளை நம்பி
மோசம் போய் இறைவன் தங்களுக்கு அளித்த
கிடைத்ததற்கு அரிதான மனித பிறவியை
வீணடித்து கொண்டிருக்கின்றனர்

இதனால் இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்பட்டு
மடிந்து கொண்டிருக்கின்றனர்


















0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home