கடவுளை காண முடியுமா ?
கடவுளை காண முடியுமா ?
கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ?
கடவுள் இருக்கிறார்
எங்கே ?
உன் உள்ளே , உன் எதிரே ,உனக்கு பின்னே ,உன்னை சுற்றிலும்,
ஏன் நீயே அவரின்ஒரு பகுதி.
பின்னால் இருப்பதையும் , ஏன் உள்ளே இருப்பதையும் நேரடியாக காண முடியாது
.அதுசரி ,என் எதிரே நின்றால் என் கண்களுக்கு ஏன் தெரியவில்லை?
உன் கண்ணின் பார்க்கும் சக்தி அவ்வளவுதான்
எப்படி . உன் கண் எதிரே காற்று இருக்கிறது
அதை உன்னால் காண
வேறு ஒரு ஊடகம் அல்லது ஒரு கருவியின் மூலம் மட்டுமே
உன்னால் அதை அறியமுடிகிறது
காற்றில் ,பிராண வாயு , நீர்வாயு, கரிமிலவாயு என கணக்கற்ற வாயுக்கள் இருப்பது கண்டு பிடிக்கபட்டிருக்கிறது . அவைகளையெல்லாம் உன்னால் பார்க்கமுடிகிறதா அல்லது அறிந்துகொள்ள முடிகிறதா
அதைப்போல்தான் கடவுளும் ,உன்னால் அவன் உன்னெதிரே இருந்தும் அறியமுடியாது .
அதற்குரிய முறைகளை கையாண்டால் நீ கண் எதிரே நிற்கும் கடவுளை கண் டிப்பாக காண முடியும் .
அவரை அறியும் முறைதான் என்ன ?
தொடர்ந்து பார்ப்போம் .
