Friday, November 28, 2008

அஜாமிளன் கதை

புராண விரிவுரையாளர்கள் அஜாமிளன்
என்பவனின் கதையை கூறி ,அவன் உயிர்
பிரியும்போது பயத்தினால்
தன் கடைசி மகன் நாராயணன் என்பவனை
அழைத்தவுடன் வைகுண்டத்திலிருந்து
கடவுள் நாராயணின் தூதர்கள் தோன்றி
அவனை எமனிடமிருந்து காப்பாற்றி
வைகுண்ட லோகத்திற்கு அழைத்து
சென்று முக்தி அளித்தார் என்று
என்று பல்லாண்டுகளாக சொல்லி வருகிறார்கள்
மக்களும் அதை கேட்டு வருகிறார்கள்
வாழ்நாள் முழுவதும் தீய செயல்கள் செய்து
தீயவர்களுடன் வாழ்க்கை நடத்திய அஜாமிளன்
ஒரே ஒரு முறை அதுவும் இறைவனை நினைந்து
அழைக்கப்படாத கூக்குரலை இறைவன் செவி மடுப்பானா
என்று சிலருக்கு சந்தேகம் எழலாம் .
நெருப்பை தெரிந்து தொட்டாலும் தெரியாமல்
தொட்டாலும் அது தொடுபவரை சுடுவதுபோல்
இறைவனின் நாமத்தை வேறு இந்த சிந்தனையுமின்றி
உச்சரித்தால் நிச்சயம் அது சொல்பவரை காக்கும் என்பதை
வலியுறுத்துவதற்காக இந்த கதை சொல்லப்பட்டுள்ளது
என்பதை புரிந்துகொள்ளவேண்டும்
ஒவ்வொருவரும் அஜாமிளன் போல் தீய வாழ்க்கை
வாழாமல் இக்கணமே இறை நினைவுடன் நல்லதோர்
வாழ்க்கை பிறருக்கு நன்மை பயக்கும் வகையிலும்,
பழிக்கு ஆளாகாமலும் வாழ தொடங்கினால்
வாழும் காலமும்வாழ்ந்து முடித்த பின்னரும் இன்பமே
தொடரும் என்பதில் ஐயமில்லை .
எவ்வளவு காலமாக இருள் சூழ்ந்திருந்தாலும்
ஒரு அறையில் எரியும் விளக்கை கொண்டு வந்தவுடன்
இருள் அக்கணமே நீங்குவதைபோல்
இருண்ட மனதில் ஒளிமயமான இறைவனின்
பெயரை நம்பிக்கையுடன்
உச்சரித்தால் நிச்சயம் இறைவனின் அருள்
கிடைக்குமென்பது சத்தியம்

Friday, November 21, 2008

Desire for what you deserve-ANNAI

Monday, November 17, 2008

நீ யார்?

நீ யார்?
என்னய்யா கேட்டீர்கள்?

ஆம் உங்களைதான் கேட்டேன்,நீ யார் என்று
நான் ராமசாமி


அது நீ இந்த உலகில் பிறந்தபோது உன் உடலுக்கு
உன்னை சுற்றி நின்றவர்கள் வைத்த பெயர்

அது நீயல்ல

இந்த உடலுக்கு வைத்த பெயர்
இந்த உடலிலிருந்து நீ புறப்பட்டவுடன்
எடுக்கப்பட்டு உயிரற்ற உடல் அல்லது
பிணம் என்று பொதுவான பெயர் சூட்டப்படும்


அப்படியானால் நான் யார்?

இந்த கேள்வியை உனக்கே நீ கேட்டுக்கொள்
இதைதான் ரமண மகரிஷியும் சொன்னார்

நீ இந்த உடல் எடுப்பதற்கு முன்பும் இருந்தாய்

இந்த உடல் அழிந்த பிறகும் நீ இருப்பாய்

இந்த உடல் எடுப்பதற்கு முன்பு
எங்கு எவ்வாறு இருந்தாய் ?

இந்த உடல் போனபின்பு எங்கு போகிறாய்?

உடலை மறந்து இந்த உலகத்தை மறந்து
உறங்கும்போது எங்கே போகிறாய்?

இந்த கேள்விகளுக்கான பதில்கள்
உன்னுள்தான் இருக்கிறது

வெளியில் உன் ஆயுள் முழுவதும் தேடினாலும்
பதில் கிடைக்காது


இந்த உண்மையை யாரும் புரிந்துகொள்ளாமல்
வெறும் வெற்று வார்த்தைகளை நம்பி
மோசம் போய் இறைவன் தங்களுக்கு அளித்த
கிடைத்ததற்கு அரிதான மனித பிறவியை
வீணடித்து கொண்டிருக்கின்றனர்

இதனால் இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்பட்டு
மடிந்து கொண்டிருக்கின்றனர்


















Thursday, November 13, 2008

யோகம் என்றால் என்ன?

யோகம் என்றால் என்ன?

எதை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்வது

அந்த செயலில் லயித்துவிடுவது

எந்த செயலிலும் உயர்வு தாழ்வு பார்க்காமல் இருப்பது

இதுதான் எல்லா யோகங்களுக்கும் அடிப்படை

எதை செய்தாலும் முழு மகிழ்ச்சியுடன் செய்வது

Wednesday, November 5, 2008

தேவர்கள் யார்?அசுரர்கள் யார்?

தேவர்கள் யார்?
இறைவன் படைத்த இந்த உலகையும், உலகில் உள்ள
அனைத்து உயிரினங்களையும்
அனைத்து படைப்புகளையும் நிர்வாகம் செய்திட
நியமிக்கப்பட்டவர்களே தேவர்களாவர்.
தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள்
எதிர்மறை சக்திகளாகவும் .செயல்படுகின்றனர்

இந்த இரண்டு சக்திகளுமே உலக இயக்கத்திற்கு தேவை .

நிர்வாகம் செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கு
மும்மூர்த்திகளும் அனேக சக்திகளும்
உடைய கோடிக்கணக்கான தெய்வங்களும் உண்டாக்கபட்டனர்

எனினும் அனைத்து சக்திகளின் இயக்கமும்
ஒரே ஒரு பரம்பொருளின்
கட்டுப்பாட்டில்தான் இயங்கிவருகின்றன
என்பதை உண்மையை உணர்ந்தோர் நன்கறிவர்.

உணராதோர் பல தெய்வங்கள் இருக்கின்றன என்று
பேதம் கற்பித்து உயர்வு தாழ்வு கற்பித்து
சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றனர்

இந்த உலகில் அனைத்தும் ஒன்றோடொன்று
தொடர்புடையவைகளே ஆகும்

ஒவ்வொரு உயிரும் தன்னை விடுத்து மற்ற
உயிர்களையோ அல்லது பொருட்களையோ துய்த்து
உயிர் வாழ வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன
பிராணிகள் அவைகளுக்கு என விதிக்கப்பட்டுள்ள
விதிகளை மீறுவதில்லை.அதனால் அவைகள் எந்தவிதமான
புதிய சிக்கல்களையும் சந்திக்காமல் வாழ்ந்து மறைகின்றன

ஆனால் மனித இனம் மட்டும் தன் பகுத்தறிவை தவறாக
பயன்படுத்திக்கொண்டு அனைத்து இயற்கை விதிகளையும் மீறி
தான் துன்பப்படுவது மட்டுமல்லாமல் இந்த உலகத்தை நரகம்
ஆக்கி தானும் அழிந்துகொண்டிருக்கிறது
இவ்வுலகில் தான் படைத்த அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ
அனைத்து வழி வகைகளையும்
இறைவன் ஏற்படுத்தி தந்துள்ள நிலையில்
மனிதன் வரைமுறைகளை மீறி இயற்கை சட்டங்களை
மதிக்காமல் அன்பான உலகத்தை
போர்க்கள பூமியாக மாற்றிவிட்டான் .
இன்பம் அளிக்கும் இந்த உலகத்தை
தன் சுயநல போக்கினால் துன்பம் நிறைந்த உலகாக
மாற்றிவிட்டான் என்றால் அது மிகையாகாது .
பலன்களை பெறும் உயிர்கள்
தாங்கள் பெறும் பலனில்
சிறு பகுதியை தேவர்களுக்கு வழங்கி
வருவதை கொண்டு திருப்தி அடைந்து தேவர்கள் தங்கள்
கடமையை செய்து வருகின்றனர்.
அசுரர்கள் என்பவர்கள் தவம் செய்து
தெய்வங்களிடம் வரங்களை பெற்று
அகந்தை கொண்டு எல்லாவற்றையும்
மற்றவர்களிடம் அபகரித்துக்கொண்டு
சுயநல எண்ணம் மிகுந்து
எல்லோரையும் துன்புறுத்தி மகிழ்வதிலே
நாட்டம் கொண்டவர்கள் ஆவார்.
பெற்ற வரங்களினால் நன்மை செய்யும் தேவர்களை
துன்புறுத்தி நிர்வாகத்தை சீர்குலைக்கின்றனர்
சில காலத்திற்கு பிறகு பரம்பொருள் உருவம் தாங்கி
அவர்களை அழித்து உலகில் அமைதியை நிலை நாட்டுகின்றது
தற்காலத்தில் பிறருடைய சொத்துகளை அபகரித்து
அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி .
சொல்லொணா கொடுமைகளை செய்யும் அனைத்து
மனிதர்களும் அசுரர்களேயாவர்.
அசுர குணம் கொண்ட அனைத்து மனிதர்களும்
கூட்டமாக இணைந்து பெரும்பகுதியான மக்களை
அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தி வருவதால்தான்
இன்று உலகெங்கிலும் துயரங்கள் தொடர்ந்து வருகின்றன.
இவ்வாறு நன்மைகளும் தீமைகளும் , நல்லவர்களும்
தீயவர்களும் மாறி மாறி இவ்வுலகில் ஆட்சி செய்துவருகின்றனர்
இவ்வுலகம் இருக்கும் வரையில் இந்த போராட்டம்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் .
எனவே மக்கள் உண்மையை
உணர்ந்துகொண்டு நன்மைகளை செய்யும்
நல்லவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் .
தீயவர்களுக்கு ஆதரவு அளித்தால்
அவர்களால் துன்பங்கள்தான் விளையும் என்பது
.பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக
தீயவர்களால் மனிதகுலம்
அனுபவித்த துயரங்களிலிருந்து
இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை
என்பதே வேதனையான உண்மை

Monday, November 3, 2008

அகந்தை

அகந்தை அனைவரையும் ஆட்டி படைக்கிறது.

அகந்தை கொண்டவன் தான் பிறரை விட உயர்ந்தவன்

என்ற எண்ணம் கொள்கிறான்.அதனால்

பிறர் அவனை புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

பிறர் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றான்

மறுப்பவர்களை வெறுக்கின்றான்.காலபோக்கில் தீய வழிகளை கையாண்டு

அவர்களை அழிக்கவும் துணிகின்றான்

அகந்தை கொண்டவன் மற்றவர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை

எப்போதும் தான் சொல்வதையே மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று விரும்புகிறான்.

அகந்தையினால்தான் மனிதன் தானும் துன்பமடைகிறான்

சக மனிதர்களையும்,உயிர்களையும் துன்பத்துக்கு ஆளாக்குகிறான்

சில பேர் சொல்லுவார்கள்,தனக்கு அகந்தையே கிடையாது.

ஆனால் எதற்கெடுத்தாலும் தான்தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்றும்,

தன்னால்தான் எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன என்றும்

தான் இல்லாவிட்டால் ஒன்றும் நடைபெறாது என்றும் மார் தட்டிகொள்ளுவார்கள்

அவர்களிடம் நீங்கள் இப்படி பேசுவது

அகந்தை கொள்ளுவதற்கு சமம் என்று சொல்லிவிட்டால் போதும்

அப்படி சொல்லியவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்

அதுதான் அகந்தையின் மகத்துவம்.

அது ஒரு மனிதரிடம் இல்லை என்று நம்ப வைத்து

அதுவே அவர் மனம் முழுவதையும் ஆட்கொண்டுஇருக்கும்.

அதை அவர்கள் அறியமாட்டார்கள் என்பதுதான் விசித்திரம்.

ஒருவன் தனக்கு அகந்தை இல்லை என்று சொல்வதே

அகந்தையின் வெளிப்பாடுதான்.

அதனால்தான் தன்னை உணர்ந்த மகான்களும்,

ஞானிகளும் தன்னை நாயினும் கடையேன் என்றும்,

புழுவினும் சிறியேன் என்றும்

எல்லாவற்றையும் நிகழ்த்தவல்ல சக்தி படைத்திருந்தும்

எல்லாம் இறைவன் செயல் என்றும்,

அவன் ஆணைப்படிதான் தான் செயல்படுவதாகவும்,

தான் அவன் கையில் ஒரு கருவி என்றும் அடக்கத்துடன் இயம்புவார்கள்.

அனைவரிடமும் பணிவாகவும்,அன்பாகவும் நடந்து கொள்வார்கள்.

ஆனால் போலிகள் தான்தான் சர்வ சக்தி படைத்தவர்கள் என்றும்,

தானே கடவுள் என்றும் மக்களை ஏமாற்றி கொண்டு திரிவார்கள்.

பணத்துக்கும், புகழுக்கும் அடிமைப்பட்ட இந்த போலிகள்

தனக்கு மிஞ்சி இவ்வுலகில் எவரும் இல்லைஎன்றும்

,தனக்கு தானே புகழ்மாலை சூட்டி கொண்டும்,

தன்னை சுற்றி துதிபாடும் கூட்டத்தை வைத்துக்கொண்டு

மக்களை ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து வருவார்கள்.

அகந்தை கொண்டு அலைபவர்கள் சில காலத்திற்கு பிறகு

அனைவராலும் ஒதுக்கப்பட்டு கந்தை துணியை போல் தூக்கி எறியப்படுவது உறுதி.

அகந்தையை முழுவதுமாக ஒழித்தவன் மட்டுமே

எல்லா உயிரினத்திலும் உறையும்,

எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து விளங்கும்

பரம்பொருளை தரிசிக்க முடியும் என்பதே

இறைவனை உணர்ந்தவர்கள் வாழ்ந்து காட்டிய வழி

என்பதை உண்மையை தேடும் சாதகர்கள் புரிந்து கொண்டு

போலிகளின் பின்னால் சென்று

வாழ்க்கையை தொலைக்காமல்

எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்..

Sunday, November 2, 2008

மரணம்

மரணம் மரணம். என்ற சொல்லை கேட்டவுடன் மனிதர்களுக்கு ஒரு பயம் வந்துவிடுகிறது. மனதில் ஒரு கலக்கம் தோன்றிவிடுகிறது அது ஏன்? அதுவும் பல காரணங்களினால் இறக்கும் தருவாயில் உள்ளவர்களும் மரணத்தை கண்டு அந்த பயத்தின் காரணமாகவே விரைவில் உயிரை விடுகிறவர்களும் உண்டு.தான் பாசம் வைத்தவர்கள் மட்டும் மரணமடைந்தால் துக்கப்படும் மனிதர்கள் உலகில் தினந்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களை பற்றி கண்டுகொள்வதேயில்லை என்பதுதான் விசித்திரம். அது அவர்களின் மனதை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. மரணம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே. அப்படியிருக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாக பாவிக்கவேண்டியதுதானே. பிறகு ஏன் அவ்வாறு செய்வதில்லை. ஒவ்வொரு மனிதனும் தான் யார்மீது பற்று வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மரணம் ஏற்பட்டால் வருத்தபடுகிறார்கள்.இதிலிருந்து தெளிவாக தெரிய வருகிறது,எதன் மீதும் பற்று வைத்தால்தான் ,அது நம்மை பாதிக்கும் என்று.எல்லோருக்கும் தெரியும் இந்த உலகில் பிறந்தவர்கள் ஒருநாள் இந்த உலகை விட்டு போக வேண்டும் என்று இருந்தும் மனிதர்கள் அந்த உண்மையை மறந்துவிடுவதால்,விதி தன் கடமையை செய்யும்போது அதை எதிர்கொள்ள சக்தியற்று வாயடைத்து போகிறார்கள்.பிறப்புக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் மனிதர்கள் தங்களின் இறப்புக்கும் உரிய ஏற்பாடுகளை செய்து வைத்துக்கொண்டு அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதில்லை. இறப்பை பற்றி பேசவே அஞ்சுகிறார்கள். இறப்பு என்பது அனைத்து உயிர்களுக்கும் இறைவன் அளித்த பரிசு. அதை கண்டு பயப்படுவதோ அல்லது அதை நினைத்து வருத்தபடுவதோ கூடாது. நாம் வாலிப பருவத்தில் இருக்கும்போது குழந்தை பருவத்தில் இருந்த உடம்பு இறந்துவிட்டது. நாம் அதை பற்றி கவலைப்பட்டது கிடையாது. நம் முதுமை பருவத்தில் வாலிப பருவத்தில் இருந்த உடல் இல்லை.அதை போல்தான் நாம் இறக்கும்போது நாம் குடியிருந்த உடலும் நமக்கு பயன்படாமல் போகிறது.பயன்படாத உடலை இவ்வுலகில். இருப்பவர்கள் அழித்துவிடுகிறார்கள். இதுதான் காலம்காலமாக நடந்து வருகிறது..நாம் இந்த உடலை விடும்போது இறைவன் நமக்கு மற்றொரு புதிய உடலை நிச்சயம் அளிக்க போகிறான். நாம் உடலை விட்டு நீங்கினாலும் நம்முடைய நிறைவேறாத ஆசைகள் மற்றும் எண்ணங்கள் நம்முடையே வருவதால் அவைகளை நிறைவேற்றி கொள்ள புதிய உடலை இறைவன் தரபோவதால் நாம் மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள் எல்லா ஆசைகளையும் எண்ணங்களையும் இங்கேயே விட்டுவிட்டு இறைவனையே நினத்துக்கொண்டு இருந்தால் எண்ணங்கள் இல்லாத நிலையில் பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லையாதலால்,நாம் மீண்டும் பிறவா நிலையை பெற்று இறைவனுடன் கலந்து விடலாம். அது உங்கள் கையில்தான் உள்ளது.