Saturday, June 18, 2011

தந்தையர் தினம்

தந்தையர் தினம்
ஜூலை 19
பிள்ளைகளே உங்களை உங்கள் தாய் மூலம்
இவ்வுலகத்திற்கு தந்த
தந்தையின் தினம்
ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு
தந்த பங்களிப்பில் எத்தனை சதவிகிதம் எத்தனை பேர்
அவருக்கு நீங்கள் திருப்பி அளித்திருக்கிறீர்கள்?
இன்றைய சமுதாயத்தில் வயதான் தந்தை
ஒரு வேண்டா பொருள் மற்றும் தீண்டா பொருள்
தன்னை ஆளாக்கிய தந்தையை வீட்டை விட்டு
விரட்டியத்தவர்கள் ஏராளம்
சொத்திற்காக தந்தையை கொன்ற
மிருகங்களும் இந்த உலகில் உண்டு
நிர்க்கதியாக முதியோர் இல்லத்தில்
தள்ளியவர்கள் ஏராளம்
அன்பாக ,கௌரவத்துடன் நடத்தா விட்டாலும்
வசைமொழிகளை வாரி இறைப்பவர்கள் ஏராளம்
உயிரோடு இருக்கும்போது அவமதித்துவிட்டு
உயிர் நீத்தபின் கருமங்களை
தவறாது செய்து என்ன பயன்?
அவர்களை அன்போடு மரியாதையோடு நடத்துங்கள்
அவர்களின் சிறு தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்
சில நிமிடங்களாவது அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்
அது போதும் அவர்களுக்கு அவர்கள் இருக்கும் காலம்வரை
ஏனென்றால் நீங்களும் ஒருநாள் அந்த நிலையை
கடக்க நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்


Tuesday, September 21, 2010

சிந்தனைக்கு சில வரிகள்

சிந்தனைக்கு சில வரிகள்

அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு

உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு

உள்ளிருந்து உன்னை இயக்குபவன் அவனன்றோ

எல்லாம் உன்னால்தான் என நீ நினைப்பது தவறன்றோ

அன்போடு அனைவரின் நலம் நாடு

அதுவே அவனுக்கு நீ செய்யும் வழிபாடு

கண்ணால் காண்பதனைத்தும் அவன் வடிவே

உன் கண்ணுள் காணும் ஒளியாய் இருப்பதும் அவன் அருளே

ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவன் லீலை

அது ஏன் என்று நீ ஆராய்வது வீண் வேலை

சாத்திரங்கள் எல்லாம் அவன் புகழ் பாடும்

நீ அவனை தோத்திரம் செய்தால் அருள் கூடும்

என்றும் நல்லோரின் கூட்டுறவை நாடிடுவாய்

தீயோரின் கூட்டுறவை விட்டு ஓடிடுவாய்

பசித்தோர்க்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்

உன்னை பாசத்தோடு பக்கத்தில் நின்று காத்திடுவான்

அரிதாய் கிடைத்த மனித பிறவியை

அவனை அறிய முற்படாது போனால்

மீண்டும் மீண்டும் பிறபிறப்பு சுழலில் சிக்கி

மாளா துன்பத்தில் உழல நேரிடும்

என உணர்ந்திடுவாய்

கடமையை தவறாது காலத்தில் செய்திடுவாய்

கணநேரமும் கடவுளை மறவாமல் வாழ்ந்திடுவாய்

காலமெல்லாம் கவலையற்று வாழ

அவன் அருள் செய்திடுவான்

Saturday, August 14, 2010

சுதந்திரம் யாருக்கு?

சுதந்திரம் யாருக்கு ?
ஆசைகள் இல்லாதவனுக்குதான்
இறைவன் நமக்களித்த உடல் ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பதற்கு மட்டும் அல்ல
இந்த உடல் ஒரு படகு
இதை நாம் அகந்தையற்று அவன் துணை கொண்டு பிறவி கடலை கடக்க வேண்டும்
வாய்ப்பை தவற விட்டால் பல நூற்றாண்டுகள் காத்திருந்து அவதி படவேண்டும்
அனைத்தையும் அவன் வடிவங்களாக காண்பவனுக்கும்
அனைத்து இயக்கங்களின் பின்னால் அவன் இருப்பதை உணர்பவனுக்குதான்
மற்ற சுதந்திரங்கள் எல்லாம் வெறும் தந்திரமே
நாம் எல்லாம் வெறும் எந்திரமே
உள்ளத்தில் நிரம்பட்டும் ராம மந்திரம்
பேதங்கள் மறைந்துவிடும்
மானிட வர்க்கம் இவ்வுலகிலேயே அடைந்துவிடும் சொர்க்கம்

Friday, July 16, 2010

உண்மை பொருள் எது?

உண்மை பொருளை உணராமல் தோத்திரங்களை

கிளிப்பிள்ளைபோல் பல ஆண்டுகள் ஓதுவதால் யாது பயன் ?

உலகில் பெரும்பாலான மனிதர்கள் இறை வழிபாட்டை

ஒரு கடமையாகத்தான் செய்கிறார்களே ஒழிய அதில் முழு ஈடுபாடு

காட்டுவதில்லை என்பதுதான் உண்மை
தோத்திரங்களை பொருளுணர்ந்து ஓதினால் மட்டுமே உண்மை பொருளான

இறைவனை உணர்ந்துகொள்ளமுடியும்

உண்மை வடிவான இறைவனை உண்மை பேசாமல் பொய்யே பேசி வாழ்வு நடத்தும் மனிதர்களால் எவ்வாறு அடைய முடியும் ?

தர்மத்தின் வடிவான இறைவனை அதர்ம வழியில் வாழ்க்கை நடத்துபவர்களால் எவ்வாறு காண முடியும் ?

எல்லா உயிரிலும் கலந்துவிட்ட இறைவனை ஒரு வடிவத்தில் மட்டும் அடைத்துவைப்பது எப்படி சாத்தியம் ?

எத்தனை பிறவிஎடுத்தாலும் இறைவனை காண முடியாது

மனிதர்கள் தோத்திரங்களை ஓதுவதில் காட்டும் அக்கரையில் ஒரு சிறு கவனம் கூட பொருளை உணர்ந்துகொள்வதில் காட்டுவது கிடையாது

இந்த மனிதர்களில் பாமரர்களுடன் மெத்த படித்தவர்களும் அடங்குவர் .

வாழ்நாள் முழுவதும் சாத்திரங்களை பற்றி விவாதம் செய்வதால் என்ன பயன் ?

அதில் கூறப்பட்டுள்ள ஏதாவது ஒரு சாதனையில் இறங்காமல் ஆயுளை வீணாக்குவதில் பயன் ஏதும் இல்லை .

ஒருவர் உதாரணத்திற்கு விஷ்ணு சஹாஸ்ரனாமத்தை பல ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் ஓதி வருகிறார் என்று வைத்துகொள்வோம் .
அதில் வரும் ஏதாவதொரு மந்திரத்தின் பொருளை உணர்ந்துகொண்டாலே அவர் ஞானம் பெற்றுவிடலாம் .ஆனால் அவ்வாறு உணர்வதற்கு முயற்சி செய்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும் .
இந்த உடலைத்தான் வியாசர் ஷேத்ரம் என்று கூறுகிறார்

இந்த உடலில்தான் சாட்சியாக பகவான் வாசம் செய்கின்றான் என்றும் கூறுகிறார்

ஆனால் எவரும் அவனை தன் உள்ளத்தில் தேடுவது கிடையாது

மாறாக அவனை கோயில்களிலும் ,மனிதர்களிடமும் உலகெங்கும் சுற்றி திரிந்து வாழ்நாளை வீனாக்கிகொண்டிருகின்றனர் .
இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு கஸ்துரி மான் தன்னிடம் உள்ள கஸ்தூரி நறுமணத்தை அறியாமல் அங்குமிங்கும் அலைந்து திரிந்து வேட்டைகாரனிடம் சிக்கி மடிந்து போவதை போல் மனிதர்களும் தன்னுள்ளே வாசம் செய்யும் ஸ்ரீனிவாசனை அறியாமல் தன் ஆயுட்காலத்தை வீணாக்கி காலனுக்கி இரையாகின்றனர் .

தன்னுள் இறைவனை கண்டவனால்தான் பிற உயிர்களிடம் இறைவன் இருப்பதையும் அனைத்துமாக இருப்பதையும் உணர இயலும் .

இந்த நிலையை அடைந்தவர்கள் பல . அவர்களில் ஞானி சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளும் ஒருவர் . அதனால்தான் அவரால் சர்வம் பிரம்ம மயம் என்று பாட முடிந்தது என்பது உண்மை .

Tuesday, June 29, 2010

SHIVABALAYOGI


Monday, February 1, 2010

Teachers viz Students

Teachers cannot teach

anything to the students
they have to help them in the way
understandable to them
to bring about the stuff

inside the children to blossom
like a flower

and also .like a sculptor

who brings out a
beautiful statue from a stone
by carefuly removing the
unwanted particles.

If a teacher thinks that he is teaching
a student he is mistaken

PEACE OF MIND-VIZ-PIECE OF LAND

PEACE OF MIND-VIZ-PIECE OF LAND

Everybody tries to purchase a piece of land outside
but never takes steps to find peace inside of their heart
that is maya